Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர்களின் விருப்பங்கள் குழந்தைகள் மீது திணிக்கப்படக் கூடாது: மோடி

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:58 IST)
பெற்றோர்கள் தங்களின் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், "குழந்தைக்கு தாய் பிறப்பை கொடுக்கிறார். ஆனால் ஆசிரியர்கள் அவர்களுக்கு வாழ்க்கையை அளிக்கிறார்கள். ஆசிரியர் தினத்தன்று ஏன் குழந்தைகளோடு நேரத்தை செல்வு செய்கிறீர்கள் என்று சில நேரங்களில் பொதுமக்கள் கேட்கின்றனர்". "ஆசிரியர்களுக்கான அடையாளம்  மாணவர்கள் என்பதால் தான் ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடன் நேரத்தை செலவு செய்கிறேன். ஆசிரியர் பணி என்பது மற்ற வேலையை போல அல்ல. அந்த பணிக்கு ஓய்வு என்பதே கிடையாது. பெற்றோர்களின் விருப்பங்கள் குழந்தைகள் மீது ஒரு போதும் திணிக்கப்படக் கூடாது." என்றார்.

மாணவர்களுடனான இந்த உரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments