Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் இணைப்பு: ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:40 IST)
பான்  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிப்பு. 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 
 
கடைசியாக பான் கார்டை ஆதாருடன்  இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பான்  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு  அறிவித்துள்ளது. 
 
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு  செயலிழந்ததாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments