இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நிலை தொடர்ந்து வரும் நிலையில் பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு சில தடைகளையும் இந்தியா விதித்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் தடைகளை விதித்துள்ள நிலையில் இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழலை தவிர்க்க பிற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில் இரண்டு நாடுகளிடையேயும் போர் மூளப்போவதாக பல யூட்யூப் சேனல்களில் பேசி வருகின்றனர். முக்கியமாக பாகிஸ்தான் யூட்யூப் சேனல்கள் சில இந்தியா மீதும், இந்திய ராணுவம் மீதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களான Dawn News, Samaa TV உள்ளிட்ட 16 யூட்யூப் சேனல்களை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்துள்ளது.
Edit by Prasanth.K