Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன்.. சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 16 மே 2025 (09:54 IST)
பஞ்சாப் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் காணப்பட்டதாகவும், அதனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தி, அதை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
பாகிஸ்தான்  ட்ரோன்கள் வழியாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடந்த சில வருடங்களாக கடத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவம் அதை அவ்வப்போது தடுத்து நிறுத்திக் கொண்டே வருகிறது.
 
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டார்ன் தரன் என்ற மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, அதை கைப்பற்றியுள்ளனர்.
 
உளவு பார்ப்பதற்காக அந்த ட்ரோன் அனுப்பி வைக்கப்பட்டதா அல்லது, ஆயுதங்கள், போதைப் பொருள்கள் ஆகியவற்றை கடத்த பயன்படுத்தப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர்.
 
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் பறந்து வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments