Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதரின் பேச்சால் சர்ச்சை

பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதரின் பேச்சால் சர்ச்சை
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (08:42 IST)
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பாகிஸ்தான் இழந்துவிட்டதாக பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கா தூதுவராக செயல்பட்டவர் ஹூசைன் ஹக்கானி. தற்போது தென் மற்றும் மத்திய ஆசியா ஹட்சன் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
 
காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் உணர்ச்சிபூர்வமாக கருதுகிறது. அதனால் தான் சர்வதேச நாடுகளின் ஆதரவை நீண்ட நாள் பெற முடியாது என்பதை தங்கள் மக்களுக்கு பாகிஸ்தான் தெரிவிக்க முடியவில்லை". 
 
"வணிகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து மூலம் இரு தரப்பும் சுமூகமான உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அதைவிடுத்து காஷ்மீரை முதலில் கொடுங்கள் என்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை பாகிஸ்தான் முன்வைக்கிறது". 
 
"எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வராது" என்று கூறினார்.
 
பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்க தூதரின் இப்பேச்சு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil