Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிஏஏ சட்டத்தால் எங்கள் நாட்டின் இந்துக்களுக்கு நிம்மதி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..!

Siva
செவ்வாய், 12 மார்ச் 2024 (15:19 IST)
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் எங்கள் நாட்டில் உள்ள இந்துக்களுக்கு நிம்மதி என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 2000 முதல் 2010 வரை விளையாடிய தனிஷ் கனேரியா என்பவர் தனது எக்ஸ் தளத்தில், சிஏஏ சட்டத்தால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இனி நிம்மதியாக மூச்சு விடலாம் என்று பதிவு செய்துள்ளார் 
 
இந்த பதிவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்காக பத்தாண்டு விளையாடிய தனிஷ் அதன் பிறகு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை செய்யப்பட்டார் என்பதும் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்துவாக பிறந்தேன் இந்துவாகவே இறப்பேன் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments