Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்கள் விவசாயிகளே இல்லை என்றால் ஏன் பேச்சுவார்த்தை – மத்திய அரசுக்கு ப சிதம்பரம் கேள்வி!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (07:30 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விவசாயிகள் போராட்டம் குறித்த மத்திய அமைச்சர்களின் கருத்து பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கும் அரசு தரப்புக்கும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டது போல தெரியவில்லை. இந்நிலையில் நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டத்துக்கு மிகப்பெரிய ஆதரவு பெருகி வருகிறது.

ஆனால் பாஜகவின் மத்திய அமைச்சர்களோ விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் புகுந்துவிட்டனர் என்றும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜெண்ட்கள் என்றும்  துக்டே துக்டே கும்பல் என்றும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்களின் இந்த கருத்துக்கு ப சிதம்பரம் டிவிட்டரில் ‘விவசாயிகளை மத்திய அமைச்சர்கள் ஆயிரக் கணக்கான குழுக்களாக பிரித்து வருகின்றனர். அப்படி பார்த்தால் அங்கே விவசாயிகளே இல்லை. அப்படி என்றால் ஏன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த  வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments