Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ கஸ்டடியில் ப.சிதம்பரம்: எடுபடாத கபில் சிபில் வாதம்!

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:58 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க அனுமதி.
 
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 
 
இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுக்கபப்ட்டதை அடுத்து அவர் நேற்றிரவு சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு முதல் சிபிஐ அலுவலகத்தின் கெஸ்ட் அவுஸில் லாக்-அப் சூட் 3-ல் சிதம்பரம் வைக்கப்பட்டார். 
இந்நிலையில்  இன்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிபிஐ தரப்பு ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என 5 நாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி வேண்டும் என கேட்கப்பட்டது. 
 
இதனை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ந்த வாதத்தின் முடிவில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
 
எனவே ப.சிதம்பரம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிபிஐ கட்டுப்பாட்டில் இருப்பார். மேலும், ஒரு நாளில் அரை மணி நேரம் தனது குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments