Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4000 பணத்துக்காக கூலித் தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த முதலாளி

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (17:43 IST)
கர்நாடக மாநிலத்தில் 4000 ரூபாய் கடனை திரும்பி தராத கூலித் தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த பண்ணை உரிமையாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மடிகேரி என்ற பகுதியைச் சேர்ந்த கிஷன் என்பவரிடம் ஹரிஷ் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் ஹரிஷ் வேலையை விட்டு நின்றுவிட்டார். வேலை விட்டு நிற்கும் முன்பு ஹரிஷ், கிஷனிடம் 4000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி கிஷன் தன்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கேட்க, ஹரிஷ் பணம் இல்லாத காரணத்தினால் கொடுக்கவில்லை. இதில் ஆத்திரம் அடைந்த கிஷன், ஹரிஷை அடித்து அவரது பண்ணைக்கு இழுத்துச் சென்றார். பண்ணையில் நாய் கூண்டில் அடைத்து வைத்தார்.
 
கூண்டில் இருந்த நாய்கள் ஹரிஷை கடித்து காயப்படுத்தியுள்ளன. சிறிது நேரம் கழித்து ஹரிஷ், நாய் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடனே ஹரிஷ் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. திமுக வெற்றி செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 நாட்களில் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?

நடப்பாண்டுடன் மூடப்படும் கோவை தனியார் பள்ளி.. மாணவர்கள், பெற்றோர் சாலை மறியல்

மாரடைப்பால் உயிரிழந்த தாயிடம் கண்ணீர் மல்க விடைபெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவி!

அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் ரெய்டு! கோடிக்கணக்கில் சிக்கிய போலி தயாரிப்புகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments