Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி? பாஜக கூட்டணியில் சீட் வழங்கப்படுகிறதா?

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (11:32 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட போவதாகவும் பாஜக கூட்டணியில் அந்த அணிக்கு சீட்டுகள் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. 
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கர்நாடகாவில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ள நிலையில் தற்போது ஓபிஎஸ் அணிக்கு ஒரு சில தொகுதிகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கர்நாடகா மாநிலம் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி சந்தித்து உள்ளதாகவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு தர கோரி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநில தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments