Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு : தூக்கில் தொங்க முயன்ற காங்கிரஸ் பிரமுகர் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (20:32 IST)
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் மட்டுமே வென்று, பாஜகவிடம் படு தோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை தான் ராஜினாமா செய்யப்போவதாக ராகுல்காந்தி தெரிவித்து, நேரு குடும்பம் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் மறுத்துவருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல்காந்தியின் தாயுமன சோனியா காந்தி ராகுலின் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை, ராகுலே கட்சியின் தலைவராக தொடர வேண்டு என கட்சியினரிடன் தெரிவித்துவருகிறார். 
 
இதற்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ராகுலே தலைவராக தொடர வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.சமீபத்தில் 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் ராகுலை சந்தித்து அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி தெரிவித்தனர்.ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
 
இந்நிலையில் ராகுல் காந்தி ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் வலியுறுத்தி காங்கிரஸ் ட்தொண்டர் ஒருவர் டெல்லி காங்கிரஸ் அலுவலகம் அருகே தூக்கில் தொங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபருடன் பேசிய போலீஸார் அவரை கீழே இறங்கச் செய்து சமாதானம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments