Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்.. சமாஜ்வாதி கட்சி புறக்கணிப்பு..!

Siva
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:53 IST)
பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில், இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியின் எம்பிக்கள் அமல்களில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் ராகுல் காந்தி பேசிய போது, பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி ஆகிய இருவரும் வெவ்வேறு நபர்கள் அல்ல; இருவரும் ஒன்றுதான். அதானியை மோடி விசாரணைக்கு உட்படுத்த மாட்டார், அவ்வாறு விசாரணை செய்தால் மோடி தன்னைத்தானே விசாரிப்பது போன்றது, என்று தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments