Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

Siva
வியாழன், 8 மே 2025 (15:20 IST)
இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கை வெற்றி பெற்றதை அடுத்து, மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்த நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவு செய்து வரும் நிலையில், பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில், இன்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக வெற்றி பெற்றதற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சித்தி விநாயகர் கோவில் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான பல கோயில்களில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் புதிய ப்ராண்ட்! ட்ரேட்மார்க் விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்!

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments