Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இனி கன்னடர்களுக்கு மட்டுமே வேலை! - முதல்வர் சித்தராமையா போட்ட புதிய சட்டம்!

Prasanth Karthick
புதன், 17 ஜூலை 2024 (09:43 IST)

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவை நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள வேலைவாய்ப்புகள் கன்னடர்களுக்கே முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்ற குரல்கள் நீண்ட காலமாகவே ஒலித்து வருகிறது. தனியார் துறைகளில் மற்ற மாநிலத்தவரை விட கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 

ALSO READ: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு..! அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..!!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா “கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சி மற்றும் டி கிரேடு பணிகளுக்கு முழுவதுமாக கன்னடர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தும் மசோதாவுக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கன்னடர்கள் தங்களின் கன்னட நிலத்தில் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். நாங்கள் கன்னட மக்களுக்கான அரசு. அவர்கள் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments