Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெங்காய ஊழல்: ஆம் ஆத்மி அரசு மீது அவதூறு பரப்பப்படுகிறது.

வெங்காய ஊழல்: ஆம் ஆத்மி அரசு மீது அவதூறு பரப்பப்படுகிறது.
, திங்கள், 21 செப்டம்பர் 2015 (08:27 IST)
வெங்காய விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை டெல்லி மாநில துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா மறத்துள்ளார்.

 
எகிறி வரும் வெங்காய விலையை குறைப்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்காய விலை நிர்ணயத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது.
 
இது குறித்து அம்மாநில துணை முதல் அமைச்சர் மனீஷ் சிசோடியா கூறுகையில், "இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை நிறுவனத்திடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும்  ஒரு கிலோ வெங்காயம்  32 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது" என்றார்.

webdunia

 
 
"போக்குவரத்து செலவினங்களை கருத்தில் கொண்டு ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் ஒரு கிலோ வெங்காயத்துக்கு அரசு 10 ரூபாய் மானியம் வழங்கி வருகிறது". என்று தெரிவித்தார்.
 
இதனால் தற்போது ஒரு கிலோ வெங்காயம்  30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை. ஆம் ஆத்மி அரசு மீது திட்டமிட்டே அவதூறு பரப்பப்பட்டு வருகிறது"என்று மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil