Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

Siva
ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (10:49 IST)
நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாளை அதாவது டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்த நிலையில் இந்த திட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து 18000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது.

அதன்பின் ஒரே நாடு ஒரே தேர்தல் வரையறுக்கப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கிறார். தாக்கல் செய்த பின்னர் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசில் வகையை அனுப்பப்படும் என்று தெரிகிறது.

மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் உறுதியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவதால் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்களவையில் வழக்கம் போல் பெரும் அமளி ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபரை காட்டிக்குடுத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்! அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா அதிபர் பதிலடி!

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது? அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்..!

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments