கனமழை எதிரொலி - கேரளாவில் ஓணம் பண்டிகை ரத்து

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:22 IST)
கேரளாவில் கனமழை பெய்து வருவதனால் இந்த மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 
 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவான ஓணம் பண்டிகையை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments