Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரு நகரில் காதலர்கள் ஓலாவில் உல்லாசம்!!

பெங்களூரு நகரில் காதலர்கள் ஓலாவில் உல்லாசம்!!
, புதன், 5 அக்டோபர் 2016 (11:20 IST)
வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப 'ஓலா ஷேர்', 'ஓலா ப்ரைம்', 'ஓலா ரெண்டல்ஸ்', 'ஓலா அவுட்ஸ்டேஷன்' என பல்வேறு சிறப்பு சேவைகளை நடத்தி வரும் ஓலா நிறுவனம், காதல் ஜோடிகள் தனிமையில் காதலிக்க 'ஓலா ரொமேன்ஷேர்' எனும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 


 
முன்னதாக இந்த சேவையை பெங்களூரு நகரில் துவங்கிய ஓலா, தற்போது அனைத்து நகரங்களிலலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
 
காதல் ஜோடிகளின் தனிமையை கருதி, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி காதலிக்க ஓலா நிறுவனம் இத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
 
இது காதல் ஜோடிகளுக்கு அமைதியான, தனிமைப்படுத்தப்பட்ட ரொமேண்டிக் பயணமாக அமையும் என ஓலா தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது, இலவச வைஃபை, இனிமையான காதல் பாடல்கள் என உல்லாச பயணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கார்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் காதலர்கள் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே இந்த உல்லாச பயணத்தை மேற்கொள்ள முடியும் என நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், கார் ஓட்டுனரிடம் இருந்தும் தனிமை தேவை என்பதால் ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே கண்ணாடி தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தனிப்பட்ட உரையாடலும் ரகசியமாகவே இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
 
இந்த 'ஓலா ரொமேன்ஷேர்' சேவையை பல ஜோடிகள் வரவேற்றுள்ள போதிலும், இதன் மூலம் தவறான குற்றச் சம்பவங்கள் நேரவும் வாய்ப்பிருப்பதாக இளைஞர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
இந்த சேவை விரைவில் சென்னை மாநகருக்கும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. உடல்நிலை: வதந்தியிலும் ஒரு வதந்தி!