Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா ரயில் விபத்து: இந்திய ராணுவம் விரைந்தது..!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (11:25 IST)
நேற்று நிகழ்ந்த ஒடிசா ரயில்வே விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விபத்தில் படுகாயங்களுடன் இருக்கும் பயணிகளை மீட்பதற்காக இந்திய ராணுவம் ஒடிசா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாசோர் என்ற மாவட்டத்தின் அருகில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் விபத்தில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகளின் மீது பெங்களூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதை அடுத்து 3 ரயில்களில் உள்ள பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது வந்துள்ள தகவலின் படி இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ளூர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவம் பாலாசோர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. 
 
அதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தின் பொறியியல் மற்றும் மருத்துவ குழுவினர்களும் பாலாசோர் விரைந்துள்ளனர். இந்திய ராணுவத்தினர் அதிரடியாக மீட்பு பணியை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments