Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராமத்தில் இருந்து தலைநகர் செல்ல ரூ.5 மட்டுமே பேருந்து கட்டணம்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (07:51 IST)
கிராமங்களை நகரத்தோடு போக்குவரத்தில் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமங்களில் இருந்து தலைநகர் செல்லும் பெண்கள், மாணவர்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் என ஒடிசா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில்  மாநிலத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆறு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தலைநகருக்கு செல்லும் பேருந்தில் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தி  பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களை கிராமத்தோடு இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநில அரசு இதற்காக 3000 கோடிக்கு மேல் செலவு செய்து உள்ளது என்பதும் முதல் கட்டமாக 1131 கிராமத்து பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்த திட்டத்தில் கிராமத்தில் இருந்து தலைநகருக்கு செல்வதற்காக அதிநவீன பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments