Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளி கைது

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (11:09 IST)
கேரள மாநிலம் கோட்டையத்தில் கன்னியஸ்திரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உத்தரகாண்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


கோட்டையத்தை அடுத்த பாலா என்ற இடத்தில் கன்னியஸ்திரிகளின் இல்லம் உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான இந்த இல்லத்தில் கன்னியஸ்திரி அமலா என்பவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி அமலா தனது அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீஷார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் காசர்கோட்டையைச் சேர்ந்த சதீஷ் பாபு என்பவர் அமலாவை கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்தரகண்டின் ஹரித்துவாரில் உள்ள ஆசிரமம் ஒன்றின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உத்தரகாண்ட் போலீசாருக்கு கேரள போலீசார் தகவல் அளித்தனர்.

இந்நிலையில் கேரள போலீசாரின் தகவலைத் தொடர்ந்து அங்கு  விரைந்த உத்தரகாண்ட் போலீசார் அமலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதீஷ் பாபுவை கைது செய்தனர். சதீஷ் பாபுவை கேரளா கொண்டு வருவதற்காக கேரள போலீஷ் குழு உத்தரகண்ட் விரைந்துள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments