Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது ஒன் ப்ளஸ் இல்லையா.. சாரி இந்த போன் வேணாம்! – திருடிய போனை திருப்பி கொடுத்த திருடன்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:14 IST)
உத்தர பிரதேசத்தில் ரயிலில் செல்போன் திருடிய நபர் தனக்கு பிடித்த செல்போன் மாடல் அது இல்லை என்பதால் உரிமையாளரிடமே திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நாள் தோறும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் சில திருட்டு சம்பவங்கள் விநோதமாக அமைந்து விடுவதும் உண்டு. உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் சென்றுக் கொண்டிருந்தபோது அவரிடம் இருந்த செல்போனை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த திருடன் தான் அதை ஒன் ப்ளஸ் போன் என நினைத்து திருடியதாகவும், ஆனால் அது சாம்சங் என்பதால் அது தனக்கு தேவையில்லை என்று மீண்டும் பயணியிடமே அந்த போனை கொடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி.. கனிமொழி ஏன் அதை கேட்கல?! - சீமான் கேள்வி!

இனி தாம்பரத்திற்கு நேரடி பஸ் கிடையாது.. கிளாம்பாக்கம்தான் ஒரே வழி! - மார்ச் 4 முதல் அதிரடி மாற்றம்

அதிகாரப்பூர்வமற்றவர்கள் டிவி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது: தவெக அறிவிப்பு

இளையராஜாவை நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! - சிம்போனி நிகழ்ச்சிக்கு வாழ்த்து!

புதுச்சேரியில் 12வது உலகத் தமிழ் மாநாடு.. பிரதமர், ஜனாதிபதி வருகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments