Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம்.. சத்குரு ஜக்கி வாசுதேவ்

Mahendran
வியாழன், 18 ஏப்ரல் 2024 (10:10 IST)
நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்க வேண்டாம் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும், நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது சமூக வலைத்தளத்தில் நோட்டாவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என்றும் ஜனநாயக முறையில் வாக்களிக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் நாட்டை யார் வழி நடத்துவார்கள் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை கையிலெடுக்க வேண்டும். ஜனநாயக செயல் முறையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் சக்தியை வீண் போக விடாதீர்கள் அல்லது நோட்டாவை தேர்ந்தெடுத்து 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் எதிர்காலத்தை கட்டமைக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள்’ என சத்குரு கேட்டுக்கொண்டார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments