Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (07:29 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சிகிச்சையை கைவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் ரத்தத்தில் உள்ள எதிரணுக்களை பிரித்து எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் செலுத்தும் சிகிச்சை முறைக்கு தான் பிளாஸ்மா சிகிச்சை என்ற பெயர். இந்த சிகிச்சை கொரோனா முதல் அலையின்போது தீவிரமாக செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை முறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் இந்த சிகிச்சை முறையை கைவிட முடிவு செய்திருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது தடுப்பூசி மருந்து,ரெம்டெசிவிர் உள்பட பல்வேறு சிகிச்சை முறைகள் வந்து விட்ட நிலையில் பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை என்ற முடிவை இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வு.. சில்லறை இல்லைன்னு ஒரு சில்லறை காரணம்??! - பாமக அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments