Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை- பிரகாஷ்ராஜ்

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (20:33 IST)
பிரதமர் மோடியின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தேசிய ஜன நாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
பிரதமர் மோடியின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
420 மோசடி செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றிப் பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை. இத்தனை சீட்களை நாங்கள் கைப்பற்றுவோம் என்று ஒரு அரசியல் கட்சி கூற முடியாது . இது கூறுவது ஆணவமிக்கது என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments