Webdunia - Bharat's app for daily news and videos

Install App

No IPL - முந்திக்கொண்ட டெல்லி அரசு: சிக்கலில் பிசிசிஐ!!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (12:54 IST)
கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கி மே 24 வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை முழுவீச்சில் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஐபிஎல் போட்டிகளை காண குவியும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் அது மிகப்பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடும் என ஐபில் போட்டியை ரத்து செய்யும்படி கோரப்பட்டிருந்தது. 
 
பிசிசிஐ இது குறித்து இன்னும் முடிவெடுக்காத நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது என டெல்லி துணை முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் பிசிசிஐ விரைந்து முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments