Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தடை இல்லை - தலைமை ஆணையர் பேட்டி

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (11:44 IST)
கார்நாடக சட்டமன்ற தேர்தலுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பில்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

 
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் முன்பு அறிவித்தார். அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
அப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதிலளித்த ஆணையர் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் குறுக்கிடாது. கர்நாடக தேர்தலுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments