Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. மாயாவதி உறுதி..!

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (08:08 IST)
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என மாயாவதி கட்சி குறித்த வதந்தி பரவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என மாயாவதி உறுதியாக கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட உடையும் நிலையில் உள்ளது என்பதும் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் முதல் 17 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என அகிலேஷ் யாதவ் கூறிவிட்டதால் மாற்று ஏற்பாடுகளை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மாயாவதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 40 - 40 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று திட்டமிட்ட நிலையில் மாயாவதி உறுதியாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் கட்சியுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிவிட்டார்.

எனவே இந்தியா கூட்டணியில் போதுமான தொகுதிகள் கிடைக்காமல், தனித்தும் போட்டியிட முடியாமல் வேறு கட்சிகளில் கூட்டணி அமைக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது என்பதும் இதில் 10 இடங்களில் வென்று பகுஜன் கட்சியும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது என்பதும், ஆனால் பாஜக 62 தொகுதிகளில் வென்றது என்பது  குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments