Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடையில் பிரதமர் புகைப்படம் வைக்காவிட்டால் நானே வருவேன்: நிர்மலா சீதாராமன்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (09:46 IST)
ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்காவிட்டால் நானே வருவேன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் போலவே தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து நேற்று தெலுங்கானா வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியபோது தெலுங்கானாவில் உள்ள கடைகளில் பாஜக தொண்டர்களால் வைக்கப்படும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் கிழிக்கப்படுகின்றன. 
 
நாட்டு மக்களுக்காக சேவை செய்பவரின் புகைப்படத்தை வைக்க கூட தயங்குவது ஏன் என்ற கேள்வியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பினார். மேலும் இப்பொழுதே பிரதமரின் புகைப்படத்தை ரேஷன் கடைகளை வைக்க வேண்டும் என்றும் அதற்கு சேதம் ஏற்படாமல் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் நானே வருவேன் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments