ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:42 IST)
ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார் என மதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதானிக்கு தவறான சலுகைகளை மத்திய அரசு அளிப்பதாக ராகுல் காந்தி உண்மையாகவே நினைத்தால் அது தவறு என்றும் யாருக்கும் எந்த ஒரு சலுகையும் அளிக்கவில்லை என்றும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி தவறு செய்கிறார் என்றும் தெரிவித்தார். 
 
ராகுல் காந்தி இதுபோன்றுதான் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தவறான குற்றச்சாட்டுகளை வைத்தார் என்றும் தற்போது மீண்டும் அதே போன்ற தவறான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் அவர் எந்த பாடத்தையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அங்கு அதானி மின் உற்பத்தி திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி அதை ஏன் தடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments