Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பட்ஜெட் நாள்.. நிர்மலா சீதாராமனின் கடைசி பட்ஜெட்டில் சலுகைகள் இருக்குமா?

Nirmala
, புதன், 1 பிப்ரவரி 2023 (08:05 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து அதில் சலுகைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
2024 ஆம் ஆண்டு தேர்தலை கணக்கில் கொண்டு புதிய வரிகள் தவிர்க்கப்படலாம் என்றும், மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி விளக்கு 3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்றும், வரிசலுகை 2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள். மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகை, 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி, விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம், இளைய தலைமுறை கவரும் வேலை வாய்ப்பு திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்கப்படுகிறதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு..!