Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேர பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனின் மெகா பிளான்..!

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (13:20 IST)
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் தேர்தல் நேர பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதன்பிறகு புதிய அரசு பதவியேற்ற உடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்த ராமன் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக  இந்த பட்ஜெட்டில் வருமானவரி சலுகை இருக்கும் என்று கூறப்படுகிறது. பழைய வரி விதிப்பு முறையிலும் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது 5 லட்சம்  வருமானம் ஈட்டுபவர்கள் வரி கட்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் நிலையில் அதை 10 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அனேகமாக ஏழு அல்லது எட்டு லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் மேலும் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்றும் அவை தேர்தலை மையமாக வைத்து உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments