Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் : பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிரவ் மோடி கடிதம்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:28 IST)
தன்னை பற்றி தவறான புகார்களை தனது நிறுவனத்தின் பெயரை பஞ்சாப் நேஷனல் வங்கி கெடுத்துவிட்டதாக தொழிலதிபர் நிரவ் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

 
மும்பை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், தொழிலதிபருமான நிரவ் மோடிக்கு, பஞ்சாப் நேஷனல் மும்பை பரோடு கிளையில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள், வங்கி பணம் ரூ.11,400 கோடியை, வங்கி ஆவணங்களில் குறிப்பிடாமல், எந்த ஆவணங்களும் இல்லாமல் நிரவ் மோடிக்கு கொடுத்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது. இதையடுத்து நிரவ் மோடி தலைமறைவானார். மேலும், அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். 
 
இந்நிலையில், அந்த வங்கிக் கிளைக்கு நிரவ் மோடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
எனது நிறுவனங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் குறைவுதான். ஆனால், தவறான புகார்களை பரப்பி எனது நிறுவனத்தில் பெயரை கெடுத்து விட்டீர்கள். இதனால் எனது தொழிலும் அழிந்துவிட்டது. வங்கி சார்பில் அவசரப்பட்டு புகார்கள் கொடுக்கப்பட்டுல்ளன. இதனால், எனது வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன. நான் பல ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணத்தை வங்கியில் செலுத்தியுள்ளேன். எனது சொத்து மதிப்பு ரூ.6,500 கோடியாகும். அதை விற்பனை செய்தால் கூட நான் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை அடைத்து விட முடியும். ஆனால், இப்போது அதற்கான காலம் கடந்துவிட்டது.
 
எனது மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு எனது தொழிலில் தொடர்பு கிடையாது. ஆனால், அவர்கள் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், தனது வங்கி  கணக்கில் இருந்து தனது 2,200 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வங்கி அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் பிரச்சார் பாரதியின் புதிய ஓடிடி: 40 சேனல்களை காணலாம்..!

3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் விமானம் ரத்து: மத்திய அமைச்சர் உத்தரவு..!

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம்: அனைத்து நீதிமன்றங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு..!

அதானி முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments