Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9ஆம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த சக மாணவர்கள்: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (11:25 IST)
கேரளாவில் விளையாட்டு வீராங்கனை ஒருவரை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை நிர்வாணப்படுத்தி ஏழு மாணவர்கள் வீடியோ எடுத்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, கடந்த 10ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்தார். ஓய்வு நேரத்தில், அவர் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது திடீரென அங்கு வந்த 7 மாணவர்கள், மாணவியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
 
இந்த விஷயத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டிய அந்த மாணவர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து தனது தந்தையிடம் சொல்ல, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வகுப்பறையில் தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரச் செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த குற்றம் நடக்க காரணம் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரை வீடியோ எடுத்ததாக கூறப்படும் 7 மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்