கோவில் விழாவில் கூட்ட நெரிசல்.. பரிதாபமாக பலியான 9 பேர்.. நிவாரண பணிகளுக்கு உத்தரவு..!

Mahendran
சனி, 1 நவம்பர் 2025 (13:33 IST)
ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஏகாதசி விழா நடைபெற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சோக சம்பவத்தில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 9 பக்தர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
 
ஏகாதசி சிறப்பு பூஜைகளுக்காக பெருமளவிலான பக்தர்கள் திரண்டதால், திடீரென நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி மற்றும் வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும், நிவாரண பணிகளை மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 லட்சம் தமிழக மாணவர்களுக்கு ஏஐ உள்பட மென்பொருள் திறன் படிப்பு: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு..!

செங்கோட்டையனை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது! - டிடிவி தினகரன் ஆவேசம்!

கோவில் விழாவில் கூட்ட நெரிசல்.. பரிதாபமாக பலியான 9 பேர்.. நிவாரண பணிகளுக்கு உத்தரவு..!

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் மக்களாட்சியை அமைப்போம்! விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments