Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு முதல் தொடங்கிய டோல்கேட் வசூல்: லாரி உரிமையாளர்கள் அதிருப்தி

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:20 IST)
ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு ஓரளவு தளர்த்தப்படும் என்றும் என்னென்ன தளர்த்தப்படும் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது
 
இதுகுறித்து மாநில அரசுகள் இன்னும் தெளிவுபடுத்தவில்லை எனினும் மத்திய அரசு முதல் வேலையாக டோல்கேட் கட்டணத்தை வசூலிக்கும் பணியை தொடங்கி விட்டது. ஏற்கனவே 20ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் வசூல் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதலே டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்காக ஏற்றி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பது முறையாகாது என அனைத்து எதிர்க்கட்சிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கமும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து ஏப்ரல் 20ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு குறிப்பிட்டபடி சரியாக நேற்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டனங்களை வசூலித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் லாரி லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
குறைந்த பட்சம் மே 3ஆம் தேதி வரையிலாவது டோல்கேட் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேண்டுகோளுக்கு மத்திய அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments