Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி: நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு..!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (16:30 IST)
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மறு அறிவிப்பு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று,  நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
 
நெக்ஸ்ட் தேர்வு இரு கட்டங்களாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் என்றும் வருகிற 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி நெக்ஸ்ட் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் தாயாரை அவதூறாக பேசிய நபர் கைது.. ராகுல் காந்தி கண்டனம்..!

சொந்த பேரனையே தலையை துண்டித்து பலிக் கொடுத்த தாத்தா! - லியோ பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!

உத்தரவிட்ட பின்னரும் பரவும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ.. உயர்நீதிமன்றம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments