Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் புதைக்கப்பட்ட 6 மணி நேர குழந்தை! ஒடிசாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (06:13 IST)
பெண் குழந்தைகள் பிறந்தவுடனே கொல்லப்பட்டு வரும் அவல நிலையை ஒழிக்க பல்வேறு தரப்பினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தபோதிலும் இன்னும் பெண்சிசுக்கொலை நடந்து கொண்டுதான் வருகிறது என்பதை சமீபத்தில் ஒடிசாவில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதுவும் அந்த குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டது என்பது கொடுமையிலும் கொடுமையான அதிர்ச்சி தகவல்



 


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று மணல் பாங்கான பகுதி ஒன்றில் குழந்தை ஒன்றின் கால் வெளியே தெரிவதை சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் மணலை அப்புறப்படுத்தி பார்த்த போது பெண் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

பின்னர் உடனடியாக அந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அந்த குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். மறுஜென்மம் எடுத்துள்ள அந்த பச்சிளங்குழந்தைக்கு மருத்துவமனை ஊழியர்கள் தாரித்ரி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த குழந்தைக்கு பூமி என்று பொருளாம். சரியான பெயர்தான்...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments