புத்தாண்டில் பிறந்த முதல் குழந்தை: இந்திய குழந்தைகள் செய்த சாதனை!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (08:59 IST)
நேற்று 2019ஆம் ஆண்டு விடைபெற்று 2020ஆம் ஆண்டு பிறந்த புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்றைய புத்தாண்டு தினத்தில் பிறந்த முதல் குழந்தை மற்றும் கடைசி குழந்தை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது
 
நேற்று புத்தாண்டு பிறந்த 12 மணியை அடுத்து ஒரு சில நொடிகளில் பிஜித் தீவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையே இந்த ஆண்டின் முதல் குழந்தையாக யூனிசெப் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை நேற்று புத்தாண்டு முடிவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தையே புத்தகத்தின் கடைசி குழந்தை என்றும் அதே அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் நேற்று பிறந்த லட்சக்கணக்கான குழந்தைகளில் 17 சதவீதம் குழந்தைகள் இந்தியாவில் பிறந்து உள்ளது என்பதால் இந்திய குழந்தைகள் இதிலும் ஒரு சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
நேற்றைய புத்தாண்டில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு குழந்தைகள் பிறந்தது என்பது குறித்த தகவலை யூனிசெப் சற்றுமுன் அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு
 
இந்தியா — 67,385.
சீனா — 46,299.
நைஜீரியா — 26,039.
பாகிஸ்தான் — 16,787.
இந்தோனேஷியா — 13,020.
அமெரிக்கா — 10,452.
காங்கோ — 10,247.
எத்தியோப்பியா — 8,493

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments