சுற்றுலா செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அதிரடி

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (20:28 IST)
மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு சாகச சுற்றுலா செல்வோர்களுக்கு மத்திய அரசு கடும் கட்ட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 
தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கினர். இதில் 24க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் சாகச சுற்றுலா செல்வோர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமுறைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் வகுத்துள்ளது. 
 
மலையேற்றம், குதிரை சவாரி உள்ளிட்ட சாகச சுற்றுலா செல்வோருக்கு காப்பீடு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் ஆகும். தரை, நீர், வான்வெளி என்ற அடிப்படையில் மூன்றுவிதமாக சாகச சுற்றுலாக்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 
 
சிறிய சுற்றுலாவின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும். இமயமலை போன்ற பெரிய சாகச நிகழ்வுகளின்போது உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும்.
 
விபத்து ஏற்பட்டு காயமடைந்தாலோ, நோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு போதிய உதவுகள் வழங்கப்பட வேண்டும். 
 
இதுபோன்ற நெறிமுறைகளை மத்திய அரசு விதித்துள்ளது. இந்த நெறிமுறைகள் குறிப்பாக சுற்றுலா நிறுவனங்களுக்கே பெரும்பாலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments