Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஒளிப்பதிவுச் சட்டம் ....மத்திய அரசு விளக்கம்

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (16:22 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை அமல்படுத்த உள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிராக தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து, இது சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தங்களின் கருத்துகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  முதல்வர் ஸ்டாலின் , கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினர்.

இதுகுறித்து தயாநிதி மாறன் எம்.பி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா மீது இறுது முடிவு எடுக்கப்படவில்லை எனவும், இந்த மசோதா  ஆலோசனை என்ற அளவில் மட்டுமே உள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments