Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை - திருவனந்தபுரத்திற்கு சுவிதா சிறப்பு ரயில்

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (05:28 IST)
தீபாவளி பண்டியை முன்னிட்டு, நெல்லை - திருவனந்தபுரத்திற்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
 

 
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை டூ நெல்லை மற்றும் சென்னை டூ திருவனந்தபுரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
 
சென்னை எழும்பூரில் இருந்து சுவிதா சிறப்பு ரயில் (எண்.00622) நவம்பர் 6ஆம் தேதி அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
 
மறுமார்க்கத்தில், அதாவது நெல்லையில் இருந்து (எண்.00623) நவம்பர் 11ஆம் தேதி  மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.05 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கோவில்பட்டி போன்ற ரயில்  நிலையங்களில் நின்று செல்லும்.
 
அதே போல, சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுவிதா சிறப்பு ரயில் (எண்.00621) நவம்பர் மாதம் 6ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
 
மறுமார்க்கத்தில், அதாவது திருவனந்தபுரத்தில் இருந்து (எண்.06103) நவம்பர் 8 ஆம் தேதி தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ரல் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
 

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Show comments