நீட் தேர்வு மையங்கள் எத்தனை? ஹால்டிக்கெட் எப்போது கிடைக்கும்? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (09:52 IST)
ஜூன் ஏழாம் தேதி இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மே ஏழாம் தேதி நடைபெறும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 499 நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களையும் தேசிய தேர்வு முகமை தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட் மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments