Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களை விட மனித உயிரே மேலானது; தெரு நாய்களை கொல்லலாம் : நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (15:19 IST)
நாய்களை விட மனித உயிரே மேலானதால், அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களை கொலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

 
திருவனந்தபுரம் மாநகராட்சி கேரளாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை பிடித்து கொன்றது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2½ லட்சம் தெருநாய்களை பிடித்து கொல்ல அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு உட்பட்டு நாய்களை கொல்லலாம் என தீர்ப்பு அளித்தது.
 
இதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விலங்குகள் நலவாரியமும் தங்களை இணைத்து கொண்டன.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”2001ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிய விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு விதிகளின் கீழ், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம்” என்று தீர்ப்பு வழங்கினர்.
 
மேலும் அனைத்து உயர் நீதிமன்றங்களும் விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் தங்கள் உத்தரவில் கேட்டுக் கொண்டனர்.

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

Show comments