Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையின் சூழ்சிக்கு மோடி இரையாகிவிட்டார்: பழ.நெடுமாறன்

இலங்கையின் சூழ்சிக்கு மோடி இரையாகிவிட்டார்: பழ.நெடுமாறன்
, திங்கள், 20 ஜூன் 2016 (08:30 IST)
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பாவின் பெயரை வைத்தது இலங்கை அரசு. அந்த பெயர் பலகையை பிரதமர் மோடியை வைத்து திறந்து வைத்தது. இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
 
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடியை கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும் என பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், 1975-ஆம் ஆண்டில் இந்த திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி செய்து, அந்த மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் மீது காவல்படையை ஏவி 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டினால் அது எத்தகைய மன்னிக்க முடியாத செயலோ, அதைப் போன்ற செயல்தான் யாழ் திடலுக்கு துரையப்பாவின் பெயரைச் சூட்டியதாகும். இந்த திடலில் படுகொலையான 9 தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் இடித்துத் தகர்த்துவிட்டது.
 
தற்போது அந்த இடத்தில் கொலை செய்யப்படுவதற்குத்  துணையாக நின்ற ஒருவரின் பெயரைத் திடலுக்குச் சூட்டுவது வெந்தப்புண்ணில் வேலைச் செருகுவது போலாகும். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வரின் இந்த செயலை பாராட்ட வேண்டும்: சரத்குமார்