Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் முறைகேடு.! சிபிஐ விசாரணை கோரி மனு.! தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உத்தரவு..!!

Senthil Velan
வெள்ளி, 14 ஜூன் 2024 (14:40 IST)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 
 
நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன.  நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  
 
மறுதேர்வு எழுத விரும்பாதவர்களுக்கு கருணை மதிப்பெண் இன்றி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரி தேசிய தேர்வுகள் முகமை தொடந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத்,  சந்தீப் மேத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் உள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து எதிர் மனுதாரர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ALSO READ: சிறையில் இன்றுடன் ஓராண்டு நிறைவு..! ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் செந்தில் பாலாஜி..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது தேசிய தேர்வுகள் முகமை 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments