Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா முதல்வராக நயப் சைனி பதவியேற்பு..! முன்னாள் முதல்வர் வாழ்த்து.!!

Senthil Velan
செவ்வாய், 12 மார்ச் 2024 (18:05 IST)
ஹரியானா  மாநில புதிய முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றுள்ளார்.
 
ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார்  இருந்து வந்தார். ஹரியானாவில் பாஜக,  ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
 
இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இந்த  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பாஜக - ஜேஜேபி இடையிலான கூட்டணி முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர். 

ALSO READ: தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..! வானிலை மையம் எச்சரிக்கை
 
இந்நிலையில் ஹரியானா மாநில புதிய முதல்வராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றுள்ளார். ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, நயாப் சிங் சைனிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய முதல்வராக பதவியேற்ற நயாப் சிங் சைனி முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.. என்ன காரணம்?

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம்: முழு விவரங்கள்..!

கனவில் வந்து கூறிய கடவுள்.. திருடிய சிலையை கொண்டு வந்து கொடுத்த திருடன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments