Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவோதயா பள்ளியின் 6ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (16:30 IST)
நவோதயா பள்ளியின் 6ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளியின் ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நவோதயா பள்ளி ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை நாடு முழுவதும் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தடைந்தன.
 
இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் 47 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றி இந்த தேர்வு நடத்தப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நவோதயா பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments