Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாருக்கு விற்கப்படுகிறதா பொதுத்துறை வங்கிகள்? எந்தெந்த வங்கிகள் விற்பனைக்கு?

பொதுத்துறை வங்கி
Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (06:51 IST)
தனியாருக்கு விற்கப்படுகிறதா பொதுத்துறை வங்கிகள்?
கடந்த சில ஆண்டுகளாக அரசின் முக்கிய துறைகள் தனியார் மயமாகி வரும் நிலையில் ஒரு சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சில பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மத்திய அரசு மாற்றியது. இந்த நடவடிக்கைக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில முக்கிய வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவாகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் சிந்த் வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகிய வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் இனிமேல் வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை என அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார்களுக்கு பொதுத்துரை வங்கிகளின் பங்குகளை விற்க எடுத்த இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments