Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிரித்த நாசா; நிலவில் சாய்ந்த லேண்டர் விக்ரம் நிலை என்ன?

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (08:58 IST)
நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலைவின் மேற்பகுதியில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. எந்த சேதமும் இன்றி சாய்ந்த நிலையில் லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பகுதியில் உள்ளதாக ஆர்பிட்டர் தகவல் கொடுத்தது. 
 
இந்நிலையில் அதை தொடர்ந்து தகவல் தொடர்ப்பை மீண்டும் பெற பல முயற்சிகல் மேற்கொண்டும் பலனலிக்கவில்லை. எனவே இஸ்ரோ, விக்ரம் லேண்டரை படம் பிடிக்க, தொடர்புகொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது. நாசாவும் உதவ முன்வந்தது. 
இதனைதொடர்ந்து இரு தினகங்களுக்கு முன்னர் நாசாவின் ஆர்ப்பிட்டர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், புகைப்பட ஏதும் வெளியாவில்லை. 
 
இப்படி இருக்கையில் நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் படம் பிடிக்க முடியவில்லை. சமிக்ஞை மூலமாகவும் லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியிட்டுள்ளது. 

இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவுக்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறாத நிலையில் விக்ரம் லேண்டரை கிட்டதட்ட இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments